சிறுவர்களை வழி நடத்தும் பொறுப்பு அதிக அளவில் பெற்றோரையும் அவர்கள் இல்லாத போது பராமரிப்பாளர்களையும் சாரும். எனவே, பெற்றோர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது வீட்டில் உள்ள பெற்றோரும் பிள்ளைகளுமாக சேர்ந்து, எப்போது இலத்திரனியல் கருவிகளை பார்ப்பது, எவ்வளவு நேரம் பார்ப்பது, எப்போது ஓப் செய்வது போன்ற விடயங்களை உள்ளடக்கித் தயாரிக்கும் திட்டமாகும். இது குடும்பத்தில் சுயகட்டுப்பாட்டை வலியுறுத்த சிறந்த உத்தியாகும். ஒரு வீட்டில் இணையத்தின் கருவிகளை பயன்படுத்துவதற்கான வரையறைகளை இதில் உள்ளடக்கலாம்.