சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.