நோன்பு (Fasting) என்பது இன்றைய உலகில் ஒரு முக்கியமான தலைப்பாக மாறியுள்ளது. உலகின் மதச்சார்பற்ற தன்மை மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகின்ற வேளையிலேயே நோன்பு என்பது எல்லோரிடத்திலும் ஒரு பெரும் வரவேற்பு பெற்ற ஒன்றாக தற்பொழுது மாறி வருகின்றது. மேற்கத்தைய நாடுகளிலேயே நோன்பு இருப்பது ஒரு சிகிச்சை முறையாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. உடல் எடையை குறைப்பதற்கு, உடலில் உள்ள மேலதிக கொழுப்புகளை அகற்றுவதற்கு, உடலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு என்று பல்வேறு நோய்களுக்கும் இந்த நோன்பிருத்தல் ஒரு சிகிச்சை முறையாக இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.