உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் உண்மை விளம்பல் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மையை ஒப்புவிக்க உண்மை விளம்பல் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வரும் நிலையில், அவ்விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.