இவ்வருடத்திற்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் முதலாவது குழு எதிர்வரும் மே 13ஆம் திகதி செல்லவுள்ளதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரச ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.