உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜி நகரில் நடக்கும் கும்பமேளா முடிவதற்கு வெகுசில நாட்களே இருக்கின்ற சூழலில் கங்கையும், யமுனா நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள நீரின் தூய்மை குறித்து இருவேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மத்திய மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகளின் கீழ் செயல்படும் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஆய்வறிக்கைகள் கூறுவது என்ன? எதன் அடிப்படையில் மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வறிக்கையை உத்தரபிரதேச மாநில அரசு நிராகரிக்கிறது?