தில்லியில் மாணவிகளைத் தாக்கிய காவல் துறை! இதை மறக்கமாட்டோம் - காங்கிரஸ்

Wait 5 sec.

வாக்குத் திருட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தில்லி காவல் துறை கடுமையாக நடந்துகொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி அரசின் கட்டளைப்படி செயல்பட்ட காவல் துறையின் நடவடிக்கையை மறக்கமாட்டோம் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் இன்று அகில இந்திய தேசிய மாணவர் இயக்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுவர் ஏறி குதித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது மாணவிகளை பெண் காவலர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். வாகனத்தில் ஏற்றிய மாணவிகளை பெண் காவலர்கள் கடுமையாக தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. இந்த விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பதிவிட்டுள்ளதாவது:''மாணவர்களை காவலில் எடுத்த பிறகு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலும், அங்கு வைத்து பெல்ட் மற்றும் லத்திகளாலும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.இவ்விவகாரத்தில், தவறு செய்த பெண் காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மேலும், தில்லி காவல்துறையே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நாங்கள் இதை மறக்க மாட்டோம். மோடி அரசின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட இந்த அராஜகத்திற்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்'' என காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.'वोट चोरी' के खिलाफ आवाज उठाने पर अमित शाह की पुलिस ने @nsui की छात्राओं की बर्बरता से पिटाई की।हिरासत में लेने के बाद पिटाई करते हुए थाने ले गए और वहां बेल्ट और पट्टों से मारा गया।इस मामले में दोषी महिला कांस्टेबल पर तुरंत कार्रवाई होनी चाहिए।और दिल्ली पुलिस याद रखे - हम… pic.twitter.com/pebXnGTQuj— Congress (@INCIndia) October 13, 2026அடுத்த போராட்டம் ஜந்தர் மந்தருக்காகவா? சிஜேபி எச்சரிக்கை!Police attacked female students in Delhi We will not forget this Congress