நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

Wait 5 sec.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 16) அறிவித்துள்ளது.முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படவுள்ளார். டெஸ்ட் தொடருக்கான அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார்.முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், நிதீஷ் குமார் ரெட்டி, அக்‌ஷர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னுர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ். News #TeamIndia’s ODI and Test squads for New Zealand tour announced Captain Shubman Gill will lead the side for the first 3️⃣ ODIs, before Shreyas Iyer takes charge for the last 2️⃣ matches.More details ▶️ https://t.co/npwxUYlb1N#NZvIND pic.twitter.com/3ckm7ixgEN— BCCI (@BCCI) October 16, 2026கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா,இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி, அக்‌ஷர் படேல், நமன் திர், ஆகிப் நபி, குர்னுர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யஷ் தாக்குர், குல்தீப் யாதவ்.டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம்ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் யோசித்து செயல்பட வேண்டும்: மோர்னே மோர்க்கல்