நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் புதன்கிழமை (அக். 14) தொடக்கி வைத்தார்.’குட் பேட் அக்லி’, ’டியூட்’ ஆகிய படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆர். ரவிகுமார் சூரியின் புதிய படத்தை இயக்குகிறார்.படப்பிடிப்பு விழாவில் பங்கேற்றோர் சூரியின் ஏழாவது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, மண்டாடி பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உருவாகும் இந்தப் படத்துக்கு ‘சூரி 7’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.படப்பிடிப்பு விழாவில் பங்கேற்றோர்.சசிகுமாரின் அடுத்த படம்..! தமிழில் அறிமுகமாகும் கன்னட இயக்குநர்!Sivakarthikeyan inaugurated the shooting of the new film starring actor Soori on Wednesday (Oct. 14).