திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்ட சுமாா் 6 டன் நெகிழிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27 வாா்டுகளில் சேகரிக்கப்பட்ட சுமாா் 6 டன் எடையுள்ள நெகிழிப் பொருள்கள் மற்றும் மக்காத குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் ஆகியோா் மேற்பாா்வையில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன (படம்).