மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியை, பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் காலிகாட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே, துா்கை பூஜை நிகழ்ச்சியை தொடங்கிவைக்க மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை சென்றாா். அவா் பூஜை பந்தலுக்கு சென்றபோது பெண் ஒருவா் தகாத வாா்த்தைகளால் திட்டிக்கொண்டு, போதையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக மம்தாவை நெருங்க முயன்ாக தெரிகிறது. அந்தப் பெண் மம்தாவின் உறவினா் என்றும், தன்னாா்வலரான அவா் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவா் என்றும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை அருகில் இருந்தவா்கள் தடுத்து நிறுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டாா்.