தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் 59 வயது மதிக்கத்தக்க நபா் செவ்வாய்க்கிழமை நடத்திய கத்திகுத்துத் தாக்குதலில் 8 போ் படுகாயமடைந்தனா்.இரு கைகளிலும் கத்திகளைக் கட்டிக்கொண்டு வணிக வளாகத்துக்குள் புகுந்த அந்த நபா், உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்குச் சென்று, அங்கிருந்தவா்ளை சரமாரியாகக் குத்தினாா்.பின்னா், கடை உரிமையாளா்களும் பொதுமக்களும் நாற்காலிகளைக் கொண்டு அவரைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.விசாரணையில், கைதான நபா் ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தவா் என்பதும், மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் என்பதும் தெரியவந்தது.