காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி மாதம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் திறந்து வைப்பார் என மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை (அக். 13) தெரிவித்தார்.காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் தமிழக அரசால் இந்தியாவிலேயே தரமான புற்று நோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தினை மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவிலேயே மிகத்தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் ரூ. 324 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 750 பேருக்கான படுக்கை வசதிகளோடு 5 மாடிக் கட்டடமாகவும், இதில் 11 தானியங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின்வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யும் அரங்கம், புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் அதிநவீன கருவிகள், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்தம், கட்டிகள் பரிசோதனை செய்யும் அரங்குகள் உள்பட அனைத்து வசதிகளோடும் அதி நவீன மருத்துவமனையாக அமைக்கப்பட்டு வருகிறது.முஇதல்வர் சி.ஜோசப் விஜய் நிதி நிலை அறிக்கையில் மாநில அளவில் தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றும் 5 மண்டல அளவிலான புற்றுநோய் சிகிச்சை மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் காஞ்சிபுரத்தில் மிகத்தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் 5 மாடிக் கட்டடத்தையும் ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்தோம். ஒரு சில குறைபாடுகள் மட்டும் உள்ளன. அவற்றை சரி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் சிறப்புகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்லி திறப்பு விழாவிற்கு அழைத்து வருவோம். வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்குள் காஞ்சிபுரத்தில் மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் கோ.க. அருண்ராஜ் தெரிவித்தார்.ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித்குமார், உத்திரமேரூர் எம்எல்ஏ ஜெ. முனிரத்தினம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, அரசு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் எஸ். சரவணன், நிலைய மருத்துவ அலுவலர் சிவகாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, அரசு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரசன்னா, சீனிவாசன் ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க பூரணகும்ப மரியாதை!Minister for Medical Education and Public Health K.K. Arunraj announced on Tuesday (Oct. 13) that Tamil Nadu Chief Minister C. Joseph Vijay will inaugurate India's best cancer treatment center in Kanchipuram this coming January.