ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு: ஏகே-47 துப்பாக்கி,கையெறி குண்டுகள் மீட்பு

Wait 5 sec.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில், குகை ஒன்றில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இதில் ஏகே-47 ரக துப்பாக்கி, ஆறு கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சத்தார்பன் வனப்பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், இந்த நடவடிக்கையின்போது யாரும் கைது செய்யப்படவில்லை.மற்றொரு நிகழ்வாக, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களுக்கு உட்பட்ட மஜால்டா மற்றும் பில்லாவர் ஆகிய இடங்களின் மலைப்பாங்கான பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த தகவலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 6 பேர் பலி, 30 பேர் காயம்!