மாதக் கடைசியில் ஏஐ டோக்கன்கள் இல்லாவிட்டால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைகள் வெளியாகி வருகின்றன.ஆனால், மென்பொருள் நிறுவனங்களில், விரைவில் ஏஐ டோக்கன்கள் இல்லாமல் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், இந்த நகைச்சுவை மிக விரைவில் துயரச்சுவையாக மாறிவிடும்.இதுவரை, மென்பொருள் நிறுவனங்களில், ஒரு பணியாளருக்கான ஏன் டோக்கன்கள் தீர்ந்துவிட்டதால், அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டார்கள் அல்லது விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான தகவல்கள் இல்லை. ஆனால், சமூக வலைத்தள நகைச்சுவை மட்டும் விரைவில் உண்மையாகிவிடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.கணினி தொழில்நுட்பத்தில் ஏஐ பல வேலைகளை எளிதாக்குகிறது, விரைவாக்குகிறது, ஆனால், ஏஐ உதவியில்லாமல் வேலை செய்ய முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டால் அப்போதுதான் நிலைமை மோசமாகும்.இது ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த ஆயாவை, கைவிட்டுவிட்டு செத்த பிறகு தேடும் நிலையை உருவாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மெட்டா, உபெர் போன்றவை இப்போதே அளவுக்கு அதிகமாக ஏஐ பயன்பாட்டை மேற்கொண்டு வருகின்றனவாம். எப்போதுமே இது இலவசமாகவோ அளவற்றதாகவோ கொடுக்கப்படாது. எனவே, நகைச்சுவை இன்று சிரிக்க உதவலாம், நாளை சிந்திக்கவும் உதவுகிறது என்பதே பொருள்.