ஜெயிலர் 2! மோகன்லால் காட்சிகள் எங்கே? மலையாள நடிகர் ஆதங்கம்

Wait 5 sec.

ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் நடித்த காட்சிகள் குறைவாக இருப்பதாக மலையாள நடிகர் ஆர்யன் வருத்தம் தெரிவித்துள்ளார்.இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த நிலையில், ஜெயிலர் 2-வில் மோகன்லாலுக்கு போதிய காட்சிகள் தரவில்லை என மலையாள நடிகர் ஆர்யன் வருத்தம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஜெயிலர் 2 படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ஒரு ரஜினிகாந்த் ரசிகனாக எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நெல்சன் ரசிகனாகவும் எனக்கு திருப்தியாக இருந்தது. ஆனால், மோகன்லால் ரசிகனாக நான் மிகவும் மனம் வருந்தினேன்.ஜெயிலர் 1 படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருக்கு திரையில் உரிய காட்சிகளும் பங்களிப்பும் கொடுக்கப்பட்டது எனக்கு பிடித்திருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இப்போது (ஜெயிலர் 2) அது இல்லாமல்போனதாக உணர்கிறேன். படத்தில் ரஜினிகாந்த் பக்கம் மட்டுமே காட்சிகள் இருந்ததாகத் தெரிகிறது.குறைந்தபட்சம், டிரைலரில் இருந்தளவுக்காவது மோகன்லால் காட்சிகளை வைத்திருக்கக் கூடாதா நெல்சன் ப்ரோ?நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஆனால், மோகன்லால் ரசிகர்களே! திரைப்படம் பார்க்கச் செல்வதற்கு முன் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியே வைத்துவிடுங்கள்.நான் இன்னும் ரஜினிகாந்த், நெல்சன் ரசிகனாக இருந்தாலும், எப்போதும் மோகன்லால் ரசிகனே" என்று கூறியுள்ளார். View this post on Instagram 27 வயதில் காலமான மலையாள இயக்குநர்! Malayalam actor Aaryan upset with Mohanlal's reduced presence in Jailer 2