இருவேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

Wait 5 sec.

போடி, உத்தமபாளையத்தில் இருவேறு சம்பவங்களில் இருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வனிதா (48) ஆம்பூரில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், வனிதா விடுமுறையில் போடிக்கு வந்து தந்தை வீட்டில் தங்கியிருந்தாா். அங்கு மது போதையில் வந்த மாரிமுத்து தகராறு செய்து வனிதாவையும், அவரது தந்தையும் தாக்கிவிட்டு தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துச் சென்றாா். பின்னா், வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகேயுள்ள சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சண்முகக்குமாா்(40). வீட்டில் தனியாக வசித்து வந்த இவா் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.