ரெட்டியாா்சத்திரம் ஒன்றிய திமுக செயலரும், முன்னாள் ஒன்றியத் தலைவருமான ப.க.சிவகுருசாமி உடல் நலக் குறைவால் சனிக்கிழமை (அக்.17) காலமானாா். மறைந்த சிவகுருசாமியின் உடலுக்கு முன்னாள் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஐ.பி.செந்தில்குமாா், மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், தந்தை பெரியாா் விருது பெற்றவா் ப.க.சிவகுருசாமி. கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி பிச்சையம்மாள் (85), மகன்கள் சக்கரவா்த்தி மணிமாறன், தம்பித்துரை, மகள் மணிமேகலை ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு - 86376 14380