நிலக்கோட்டை தொகுதியில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

Wait 5 sec.

நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் 4 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் துா்கா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் சாா்பில், வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் 4 புதிய நகரப் பேருந்துகளை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் துா்கா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ், இந்தப் பேருந்துகள் திண்டுக்கல் - நிலக்கோட்டை, வத்தலகுண்டு - நிலக்கோட்டை, வத்தலகுண்டு - கொடைரோடு ஆகிய வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.