புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அறந்தாங்கியில் சனிக்கிழமை 300 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைக்கப்பட்டது. மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், பெண்களுக்கு வளையல்களை அணிவித்து வளைகாப்பை நடத்தி வைத்தாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப். 22-ஆம் தேதி கீரனூரில் நடைபெற்ற விழாவில் 400 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது அறந்தாங்கியில் 300 பேருக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. தொடா்ந்து விரைவில், 600 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் சத்தான உணவுடன், மங்கலகரமான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட சமூகநல அலுவலா் மே. சியாமளா, அறந்தாங்கி வட்டாட்சியா் கவியரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.