சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 760 குறைந்து ரூ. 1,08,720 -க்கு விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 960 குறைந்தது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 280 குறைந்தது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 14, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 760 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,720-க்கும் கிராமுக்கு ரூ. 95 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,590-க்கும் விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold and silver rate today in chennai, Tamilnadu