சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதிகள்! முதல்வர் விஜய் வாழ்த்து

Wait 5 sec.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார். மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், திரு.பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில்,…— CMOTamilNadu (@CMOTamilnadu) October 14, 2026இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, தா்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் காா்த்திகேயன் ஆகிய நீதித்துறை அதிகாரிகளை சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா் என சட்ட அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. New Additional Judges for the Madras High Court: Chief Minister Vijay Extends Wishesசென்னை உயா்நீதிமன்றத்தில் இரு கூடுதல் நீதிபதிகள் நியமனம்