சென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் எல் - நினோ வல்லுநர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் (அக். 15) தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.இந்த நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை தொடங்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 வாரங்கள் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற கணிப்பை பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது:”அவ்வப்போது திடீர் மழைப்பொழிவு ஏற்படும். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யலாம். சில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யாது. மழைப்பொழிவுக்கு இடையே வெய்யில் அல்லது மேகமூட்டமான சூழல் நிலவும்.மழையின் நேரம், கால அளவு மற்றும் தீவிரம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடும்.சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்று முதல் வெளியே செல்லும்போது குடை அல்லது மழைக்கோட்டை உடன் எடுத்துச் செல்லுங்கள்.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் சென்னைக்குச் சிறப்பாக அமையவுள்ளது. எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது. நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Rain for Chennai starting today - What will the next two weeks be like?அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை!