போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் கட்டி அகற்றம்!

Wait 5 sec.

போப் 14-ஆம் லியோவுக்கு வலது நுரையீரலில் புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.போப் 14-ஆம் லியோவுக்கு (71) செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது வலது நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, இத்தாலி தலைநகா் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போப் லியோ செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.சுமார் 90 நிமிடங்கள் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் அவரது வலது நுரையீரலில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.அறுவைச் சிகிச்சைக்கு பிறகு போப் லியோ நலமுடன் இருப்பதாகவும், ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி அவர் ஓய்வெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் வரும் அக். 20 வரையிலான அவரின் அனைத்து அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளும், சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பிறகு, போப் லியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையின் போது, புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடம், தனக்கு புற்றுநோய் கட்டி இருப்பதை மருத்துவர்கள் மிக ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதாக போப் லியோ தெரிவித்தார்.Lung cancer tumor removed from Pope Leo!கோயில்களில் செல்போன் தடையில்லை: சுவிட்ச் ஆஃப் செய்து எடுத்துச் செல்லலாம்!