ஜந்தர் மந்தருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்து, ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடமில்லை என்று அறிவித்துள்ளது.மத்திய அரசின் அறிவிப்புகளைத் தொடந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் பிற சிஜேபி உறுப்பினர்கள் நேற்று(அக்.13) போராட்டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை தில்லி காவல்துறை கைது செய்தது.சிஜேபி நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே ஆகியோரை தில்லி காவல்துறையினர் நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் கைது செய்துள்ளதாக சிஜேபி சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.மூவரையும் இன்று காலையில் தில்லி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வழக்குரைஞர் ரத்னா சிங் தகவல் தெரிவித்துள்ளார்.சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே மூவர் மீதும், தில்லியின் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் அஜிங்க்யா ஷிண்டே, அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட போதிலும் அவர்களிடம் “உற்சாகம் குறையவில்லை” என்று பதிவிட்டுள்ளார். Cockroach Janta Party (CJP) leaders Saurav Das, Ashutosh Ranka and Ajinkya Shinde have been placed under preventive arrest in connection with a protest at Delhi's Jantar Mantar, where they entered the area without authorisation and raised slogans demanding Chief Election Commissioner Gyanesh Kumar's resignation.