கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்காவுக்கு தில்லி நீதிமன்றம் 5 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்து, ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடமில்லை என்று அறிவித்துள்ளது.இதனிடையே, ஜந்தர் மந்தருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.சிஜேபி நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே ஆகியோரை தில்லி காவல்துறையினர் நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் கைது செய்து வைத்துள்ளதாகவும், மூவரையும் இன்று காலையில் தில்லி போலீசார், தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிஜேபி சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், சௌரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே ஆகிய மூவரும் தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். சௌரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா இவரும் ஐந்து நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அஜிங்கியா ஷிண்டே பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு விடுவிக்கப்பட்டர்.சௌரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Three CJP leaders were detained after allegedly entering Jantar Mantar without authorisation. Police have registered a case against them, while the party's legal team has alleged illegal detention and denial of access to lawyers.