ஏரோப்ளேன்... சீன் படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

Wait 5 sec.

சூர்யா நடிக்கும் சீன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியானது.நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். மலையாளத்தில் ஆவேசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, வெளியான ‘ஆத்தி இவ யார்ரா’ என்கிற முதல் பாடல் கவனம் பெற்ற நிலையில், அடுத்த பாடல் அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.ஏரோப்ளேன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால், சீன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சீன் போஸ்டர்தனுஷின் ஓம்! இரண்டாவது பாடல் அறிவிப்பு!The second song of Suriya's movie Scene has been announced.