தனுஷின் ஓம்! இரண்டாவது பாடல் அறிவிப்பு!

Wait 5 sec.

தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’அலாக்கா லோவா' சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான மம்மூட்டி கிளிம்ஸ் விடியோவும் கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ’வீழா வீரா’ என்ற இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.ஓம் திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் ஜெயிலர் மற்றும் சீன் திரைப்படங்களின் வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற நவ. 20 அன்று இப்படம் வெளியாகவுள்ளது.ஓம் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜெயிலர் - 2 வெற்றி... ரஜினியைச் சந்தித்த நெல்சன், அனிருத்!The second song of Dhanush's film Om has been announced.