சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பப் (வாபஸ்) பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கிழக்கு திசை நோக்கி நகர்ந்ததால் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.எனினும், சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.தமிழக பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக உஷார்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைப்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய அவசரகாலக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்Red alert issued for Chennai withdrawn! Meteorological Department