சென்னையில் மழைநீர் தேக்கம்: 500 டிராக்டர்கள் மூலம் மழைநீரை அகற்ற ஏற்பாடு!

Wait 5 sec.

சென்னையில் பெய்த தொடர் கனமழையால், ராயபுரம் சூரிய நாராயண மூர்த்தி சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.லோட்டஸ் ராமசாமி தெரு, கொடிமரத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறி, சாலையில் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தேங்கிய நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பேருந்துகள், லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மெதுவாகச் செல்ல வேண்டியிருப்பதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், அன்றாடப் பணிகளுக்குச் செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ராயபுரம் மட்டுமின்றி, திருவொற்றியூர், பெரியார் நகர், காசிமேடு சுடுகாடு சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 500 டிராக்டர்களில் மோட்டார்கள் பொருத்தி பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், ராயபுரம் சூரிய நாராயண மூர்த்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் எப்போது முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன், மழைநீர் வடிகால்களில் நீர் தடையின்றி வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Due to the continuous heavy rains in Chennai, the public is facing severe hardship as knee-deep rainwater has accumulated on Surya Narayana Murthy Road in Royapuram.18.10.1976: சென்னை அருகே கடலில் 250 மீனவர் தவிப்பு