சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழையால், வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், வேளச்சேரியில் பல இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், வேளச்சேரியில் தேங்கிய மழைநீரில் கார் ஒன்று முழுமையாக மூழ்கியிருக்கும் காட்சிகளும், இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரியின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.எனவே, தேங்கிய மழைநீரை விரைந்து வெளியேற்றுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நிரந்தர வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.Due to the heavy rains currently falling in Chennai, rainwater has once again accumulated in various parts of Velachery, creating a flood-like situation.சென்னையில் மழைநீர் தேக்கம்: 500 டிராக்டர்கள் மூலம் மழைநீரை அகற்ற ஏற்பாடு!