கொல்கத்தா துர்கா பூஜை கூட்ட நெரிசல் சம்பவம்: ரூ. 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை அறிவிப்பு!

Wait 5 sec.

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியான சம்பவத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தசரா பண்டிக்கை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான நவராத்திரி பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜைக்காகப் பந்தல் போடப்பட்டிருந்தது.கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள சோர்பகன் சர்போஜானில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மிகக் கனமழை பெய்ததால், பந்தலுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் திடீரென முந்தியடித்துக்கொண்டு உள்ளே ஓடியதால், அவர்களில் சிலர் சாலையில் விழுந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்தச் சம்பவத்தில் 19 பேர் பலியான நிலையில், காயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் உயர் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கொல்கத்தா காவல்துறையின் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகப் பலர் குற்றம் சாட்டினர். மேற்கு முதல்வர் சுவேந்து அதிகாரி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.இந்த நிலையில், கொல்கத்தா கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும் முழு மருத்துவச் செலவுகளையும் அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.West Bengal Chief Minister Suvendu Adhikari announced Rs 25 lakh compensation and a government job for the family of each person killed in the Kolkata stampede. The government will also cover the full medical expenses of the injured and provide Rs 5 lakh compensation to each of them.