ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காகவும் கூட்ட நெரிசலை குறைக்கவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.தாம்பரம் - செங்கோட்டைதாம்பரம் - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயிலானது (06089) வரும் 19 ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06090) வரும் 20 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன. 8 படுக்கை பெட்டிகள், 11 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.15 க்கு சென்றடையும். எதிர்வழித்தடத்தில், செங்கோட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்குச் சென்றடையும்.சென்னை சென்ட்ரல்- கொல்லம்நாளை(அக். 19) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல்- கொல்லம் சிறப்பு ரயில் (06083), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Special trains are being operated for those returning home for the Ayudha Puja holiday and to reduce congestion.