இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக நேற்று (அக். 17) சென்னையில் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று தேவா குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்தனர்.தேவாவின் உடல் இன்று ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், நடிகர் வடிவேலு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், “இசையமைப்பாளர் தேவா அண்ணன் திடீரென மறைந்தது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. மிக நல்ல மனிதர். என்னைப் பார்த்தால் வாங்க வடிவேலு தம்பி என அன்புடன் அழைத்துப் பேசுவார். மொத்த குடும்பத்திற்கும் ஒரே ஆளாக அனைவரையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவர் இறந்ததும் அக்குடும்பத்தினர் அழுவதைக் கண்டால் நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆனது போல் இருக்கிறது. தேவா அண்ணன் மறைந்தது என் மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது. அண்ணனின் குடும்பம் எப்போதும் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.” எனத் தன் இரங்கலைப் பதிவு செய்துள்ளார். உங்களுடன் பழகிய நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது: தேவாவுக்கு சூர்யா இரங்கல்!Actor Vadivelu has expressed his condolences on the demise of music composer Deva.