நடப்பு சீசனில் 11ஆவது ஆட்ட நாயகன் விருதை வென்ற மெஸ்ஸி: ஹாட்ரிக் வெற்றியில் இன்டர் மியாமி!

Wait 5 sec.

எம்எல்எஸ் தொடரில் இன்றைய போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். நடப்பு சீசனில் இது அவருக்கு 11ஆவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லாண்டா யுனைடெட் அணி தனது சொந்த மண்ணில் இன்டர் மியாமி உடன் மோதியது. இதில் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் முதல் பாதியின் கடைசி நிமிஷத்தில் மியாமியின் ஜெர்மன் பெர்டர்மே கோல் அடித்து 1-0 என முன்னிலைப் பெற வைத்தார். இரண்டாம் பாதியில் மெஸ்ஸி 56, 60ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 3-0 என முன்னிலைப் பெற வைத்தார். அதிலும் 56ஆவது நிமிஷத்தில் அவர் அடித்த கோல் வின்டேஜ் மெஸ்ஸியை ஞாபகப்படுத்தியது. கடைசியில் பெனால்டி வாய்ப்பில் அட்லாண்டா அணி 89ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தது. இறுதியில் ஸ்டாப் டைம் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மியாமி வென்றது. மெஸ்ஸி ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.இந்த வெற்றியுடன் இன்டர் மியாமிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கடந்த போட்டியில் வெல்லும்போதே பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. YOU JUST CAN’T STOP HIM. pic.twitter.com/eHtDumNNwx— Inter Miami CF (@InterMiamiCF) October 18, 2026என் பயோபிக்கில் நடிக்க பிரியங்கா சோப்ரா தகுதியானவர்..! சவிதா புனியா பேட்டி!Lionel Messi scores twice, Inter Miami to 3-1 victory over Atlanta United