குட் மார்னிங்... வித்யா பாலனுக்கு அதிகரிக்கும் ரசிகர்கள்!

Wait 5 sec.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தில் வித்யா பாலன் நடிப்பு வரவேற்பு பெற்றுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் வணிக ரீதியாக பெரிய சாதனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தைத் தவிர நடிகர்கள் நமோ நாராயணன் மற்றும் வித்யா பாலனின் கதாபாத்திரங்களும் அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.அதிலும், நடிகை வித்யா பாலனின் தோற்றமும் அவருக்கான வசனங்களும் கச்சிதமாக இருந்ததால் கடந்த சில நாள்களாக வித்யா பாலனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திரைப்படத்தில் நடிகர் ரஜினி, வித்யா பாலனுக்கு குட் மார்னிங், குட் ஈவினிங் குறுஞ்செய்திகளை அனுப்பி பதிலுக்கு காத்திருப்பார். அதே போல், பல ரசிகர்களும் வித்யா பாலனுக்கு காலை வணக்கத்தை அனுப்பி பதில் கிடைக்குமா என காத்திருக்கின்றனர்!ஜெயிலர் 2! மோகன்லால் காட்சிகள் எங்கே? மலையாள நடிகர் ஆதங்கம்Vidya Balan's performance in the film Jailer - 2, starring actor Rajinikanth, has been well received.