நானியின் தி பாரடைஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் கடந்த செப்.24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.பான் இந்திய அளவில் வெளியான இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.தி பாரடைஸ் திரைப்படம் தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.மேலும் இந்தப் படத்தில் சோனல் குல்கர்னி, ராகவ் ஜுயல், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இந்த நிலையில், தி பாரடைஸ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.The OTT release date of Nani's film The Paradise has been officially announced.சண்டைக்காட்சிகளால் நிரம்பிய தி பாரடைஸ் எப்படி இருக்கிறது? - திரைவிமர்சனம்