விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதா

Wait 5 sec.

விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பேசியுள்ளார்.புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா(75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (அக். 17) காலமானார்.இதைத் தொடர்ந்து, சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசியதாவது:கேப்டன் விஜயகாந்த், தேவா இருவரும் இன்று பூமியில் இல்லை என்றாலும் கண்டிப்பாக சொர்க்கத்தில் மீண்டும் சந்திப்பார்கள். ஏனென்றால், அவர்கள் இரண்டு பேருக்குமான நட்பு சாதரணமானதல்ல. அந்த அளவுக்கு உண்மையான பாசத்துடன் பழகியவர்கள். தேனிசைத் தென்றல் தேவா என்றால் உலகமெல்லாம் தெரியும். அண்ணன் - தம்பி, குடும்பம் என அனைவருக்கும் ஓர் உதாரணமாக வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார்.அவர் எங்கும் மறையவில்லை. அவருடைய இசை காற்றில் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை அவரது பேரும் புகழும் நிச்சயமாக நிலைத்திருக்கும். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி உண்மையிலேயே பெரிய அதிர்ச்சி. அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் எங்கள் குடும்பம், கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.உங்களுடன் பழகிய நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது: தேவாவுக்கு சூர்யா இரங்கல்!DMDK General Secretary Premalatha said on Sunday (Oct. 18) that Vijayakanth and Deva will meet in heaven.