கொண்டாட்டம்... குத்தாட்டம்... ஜெயிலர் - 2 வசூல் இவ்வளவா?

Wait 5 sec.

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் பல பகுதிகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் 3 நாள் வசூலாக உலக அளவில் ரூ. 350 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இப்படத்தைக் கொண்டாடி வருவதால் தமிழிலேயே ரூ. 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், அல்ல போலேலோ பாடலுக்கு கேரளத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து அங்கு திரையரங்குகளிலேயே ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். தெலுங்கிலும் ஹிந்தியிலும் பெரிய கவனம் கிடைத்து வருகிறது. இதனால், ஜெயிலர் - 2 திரைப்படம் குறைந்தது ரூ. 700 கோடி வசூலைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் மார்னிங்... வித்யா பாலனுக்கு அதிகரிக்கும் ரசிகர்கள்! Information has been released about the box office collection of actor Rajinikanth's Jailer - 2.