இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் இன்று (அக். 18) நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமைச்சர் காந்திராஜ், ஆட்சியர் பிரியா, காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் இருந்தனர். சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தேவா உடல், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேவுள்ள சக்கரமல்லூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரின் இல்லத்தில் கிராம மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் இல்லம் அருகேவுள்ள இடத்தில் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து தேவாவின் உடலை நல்லடக்கம் செய்தனர். அரசு மரியாதைசக்கரமல்லூரில் தமிழக அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா (75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (அக். 17) காலமானார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.பிறகு தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமநல்லூருக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. சக்கரமல்லூரில் உள்ள தேவாவின் சொந்த வீட்டில் அவரின் உடல், கிராம மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்குச் சொந்தமான கிருஷ்ணவேனி தோட்டத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து அவரின் உடலை நல்லடக்கம் செய்தனர். விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதா Music composer Deva's body buried with state honors