காளான் கட்லட்

Wait 5 sec.

தேவையான பொருள்கள்: நறுக்கிய காளான் - கால் கப் பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1, பீன்ஸ் -4 சீரகத்தூள் - அரை மேஜை கரண்டி சாட் மசாலா, கரம் மசாலாத் தூள் - தலா கால் மேஜை கரண்டி உப்பு, எண்ணெய், ரொட்டித் தூள் - தேவையான அளவு செய்முறை:ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், காளான் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதனுடன் சாட் மசாலா, மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு உருண்டையாக எடுத்து தட்டி வைத்துக் கொள்ளவும். பிரட் தூளில் தொட்டு தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான காளான் கட்லெட் தயார். நாகஜோதி கிருஷ்ணன்