தேவையான பொருள்கள்: ப்ரோக்கோலி, ஸ்வீட் கார்ன் - தலா அரை கோப்பை கேரட் - அரை கோப்பை ( நறுக்கியது)காளான் - 1 கோப்பைஇடித்த பூண்டு - 1 மேஜை கரண்டி வெங்காயத்தாள் - கால் கோப்பை மிளகுத்தூள் - அரை மேஜை கரண்டி சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டிதேங்காய் எண்ணெய் - 1 மேஜை கரண்டி , உப்பு - தேவையான அளவு செய்முறை:வேக வைத்து நறுக்கிய கேரட், ப்ரோக்கோலி, காளான், ஸ்வீட் கார்ன் சேர்த்து மூடி வைத்து 6 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து லேசாக வதக்கவும். பின் அவற்றைச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்றாகப் பிரட்டவும். காளான் சாலட் தயார்.நாகஜோதி கிருஷ்ணன்