டி20 தரவரிசை: முதல்முறையாக டாப் 5ல் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

Wait 5 sec.

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது உச்சத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் முதல்முறையாக டாப் 10க்கு முன்னேறியவர், தற்போது டாப் 5க்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அசத்தினார். இரண்டாவது போட்டியில் ஷ்ரேயாஸ் 18 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். மூன்றாவது போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். நான்காவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில், ஐசிசி டி20 தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல்முறையாக நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் இஷான் கிஷன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். திலவ் வர்மா 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷாய் ஹோப் இரண்டு இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்துக்கு முன்னேறினார். ஐசிசி டி20 தரவரிசை1. இஷான் கிஷன்2. அபிஷேக் சர்மா3. சாஹிப்சாதா ஃபர்ஹான்4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. ஹாரி புரூக்6. ஜாஸ் பட்லர்7. டெவால்டு பிரேவிஸ்8. பில் சால்ட் 9. திலக் வர்மா 10. பதும் நிசாங்கா கேரள அரசின் விருது விழாவில் முதல்வர் விஜய் பாணியில் ஆன்சி சோஜன்..! வைரல் விடியோ!India captain Shreyas Iyer moves up three places to career-high 4th in ICC T20I rankings