இசையமைப்பாளர் அனிருத் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் நாளை (அக. 15) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக, ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துள்ளதால் முதல் நாள் வணிகமே பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “தலைமுறைகள் கடந்து மகிழ்ச்சியையும் சிரிப்பையும் சிலிர்ப்பையும் வாழ்நாளுக்குமான நினைவுகளையும் கொடுத்தவர். 76 வயதில் கடந்த 51 ஆண்டுகளாக, இப்போதும் மேஜிக்களை உருவாக்கி வரலாறுகளை மாற்றி எழுதுகிறார். நாளை, மீண்டும் ஒருமுறை 172-வது முறையாக திரையரங்குகளில் அவரது படம் வெளியாகவுள்ளது. For generations, he has given us happiness, laughter, goosebumps and memories for a lifetime.At 76 and for the past 51 years, he still creates magic and rewrites history. Tomorrow, once again for the 172nd time, the lights will dim, the screens will ignite and hopefully with all your wishes, the world will witness the love for a man who lives in the hearts of every Indian. One Sun. One Moon. And One :) #Jailer2 from tomo Superstar @rajinikanth @Nelsondilpkumar @sunpictures— Anirudh Ravichander (@anirudhofficial) October 14, 2026 உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இடம்பிடித்த அந்த மாபெரும் மனிதர் மீதான அன்பை உலகமே மீண்டும் காணும் என நம்புகிறோம். ஒரு சூரியன்; ஒரு சந்திரன்... ஒரே ஒரு... (சூப்பர்ஸ்டார்)” எனத் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமல்லாது கேரளத்திலும் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கு அதிக டிக்கெட்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. நாய், பன்னி... மோகன். ஜிக்குப் பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!Music composer Anirudh has posted his best wishes for actor Rajinikanth's Jailer 2.