வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருணாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் – ரேவதி தம்பதியர் இல்லத்தில், 22-வது ஆண்டாக நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமான முறையில் கொலு அமைத்து வரும் இந்தத் தம்பதியர், இந்த ஆண்டு திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தை நினைவுபடுத்தும் வகையில் தத்ரூபமான வடிவமைப்பில் கொலு அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.இந்தக் கொலுவில் கீழ்த் திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில், திருப்பதி திருமலை மலைப்பாதை, மூலவர் வெங்கடாசலபதி, அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார், கருடாழ்வார்கள், 12 ஆழ்வார்கள் உள்ளிட்ட தெய்வீக அம்சங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன.மேலும், திருப்பதி கோயிலின் பல்வேறு பிரகாரங்கள், தெப்பக்குளம், லட்டு கவுன்டர் ஆகியவற்றுடன், ரூ .300 சிறப்பு தரிசன வழி, இலவச தரிசன வழி, சிறப்பு விஐபி தரிசன வழி எனத் திருமலையில் காணப்படும் தரிசன முறைகளையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.இத்துடன், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. திருப்பதி திருமலைக்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவராத்திரி கொலு, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.A Navaratri kolu has been set up for the 22nd year at the home of Santosh and Revathi, a couple from Arunachalam Nagar, Gudiyatham, Vellore district.4,000 பொம்மைகள்… ஒரே இடத்தில் முப்பெரும் தேவியர்! சென்னையில் பிரம்மாண்ட நவராத்திரி கொலு!