நடிகர் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதுவரை ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் பல நட்சத்திர நடிகர்களுக்கும் சவால் விடும் வணிகத்திலேயே ரஜினி இருக்கிறார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தின் மூன்றுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. என்ன நடை.. என்ன ஸ்டைலு! | #cinemaexpress #Dharman #rajinikanth #superstar #jailer2 #ashwathmarimuthu @NewIndianXpress https://t.co/cG5tC3BVMS— Cinema Express (@XpressCinema) October 19, 2026 இந்த நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட தர்மன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட போது அவர் நடந்து வரும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனைப் பகிர்ந்த பலரும் வயதானாலும் மிடுக்கான நடையில் அவரைச் சுற்றியிருப்பவர்களைக் கவனிக்க விடாமல் செய்கிறார் என ரஜினியைப் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முதல்முறையாக... சாதனை படைத்த ஜெயிலர் - 2!A video of actor Rajinikanth's shooting is going viral on social media.