திருப்பாச்சி புதிய மறுவெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

முதல்வர் விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படம் விரைவில் மறுவெளியீடாகிறது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம், கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார். நாயகியாக நடிகை த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, மல்லிகா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்திருந்தனர். திருப்பாச்சி படத்தில் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. இப்படம் வெளியான போது, தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படம் வருகிற டிச. 25 ஆம் தேதி மறுவெளியீடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் நடிக்கப்போவதில்லை என அறிவித்ததால் அவரின் பழைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உன் நடை அழகு... வைரலாகும் தர்மன் ரஜினி விடியோ!The film Thirupachchi starring Chief Minister Vijay is being re-released.