பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்கு கோவை வந்துள்ள முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வா் விஜய் இன்று (அக்.16) திறந்துவைக்கிறார். விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வேனில் செல்லும் முதல்வர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள், மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். வரும் வழியில் திறந்த வேனில் நின்றபடி முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தை திறந்துவைக்கும் முதல்வர் விஜய், அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். CM Vijay in Coimbatore; Enthusiastic welcome from the public all along the way