தில்லியில் நாளை சிஜேபி போராட்டம்! தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Wait 5 sec.

தில்லியில், கன்னாட் பிளேஸ் பகுதியில் நாளை நடைபெறவுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) போராட்டத்துக்குத் தடை விதிக்க, தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி போராட்டத்தை காவல் துறையினர் முறைப்படுத்த வேண்டுமெனக் கோரி கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நிதின் வசுதியோ சம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தில்லி காவல் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் அடிப்படையில், அதிகாரிகள் உறுதியளித்துள்ளதால், சிஜேபி மற்றும் அபிஜீத் தீப்கே போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணை வரும் நவ. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி! The Delhi HC has refused to impose a ban on the protest planned for tomorrow by the cjp in the Connaught Place area of ​​Delhi.