ஹரியாணாவில் தசரா பண்டிகையில் எரிப்பதற்காக 221 அடி உயர ராவணன் உருவ பொம்மை தயாரிக்கப்பட்டு வருகிறது.நவராத்திரி முடிவில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்த விழாவில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டு, தீமையின் மீது நன்மை வெற்றி பெற்றதாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தசரா பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.இதன்படி, ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் இந்தாண்டில் 221 அடி உயரமுள்ள பிரமாண்டமான ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டு கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ. 35 லட்சம் மதிப்பில் ராவணன் உருவ பொம்மை தயாரிக்கப்பட்டு வருகிறது.நாட்டில் முதன்முறையாக 221 அடி உயரமுள்ள இரு ராவணன் உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, அதில் ஒன்று பஞ்ச்குலாவின் செக்டர் 5-ல் உள்ள ஷாலிமார் திடலில் எரிக்கப்படவுள்ளது.மேலும், பிரமாண்டமான உருவ பொம்மையின் அளவைக் கருத்தில்கொண்டு, நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனி கவனம் செலுத்தியுள்ளனர். எரிக்கப்படவிருக்கும் ராவணன் பொம்மையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதனைச் சுற்றிய குறிப்பிட்ட எல்லைக்குள் மக்கள் நுழைய தடுக்கப்படும்.அதுமட்டுமின்றி, இந்த விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாணவேடிக்கைகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.ரூபாய் மதிப்பு தொடர் சரிவு! தள்ளிப்போகும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு!221-ft Ravana effigy built for Rs 35 lakh to go up in flames in Haryana on Dussehra